ஆந்திராவில் கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி சேவல் பந்தயம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இதில் சேவல்கள் காயம் அடைகிறது என்று பந்தயத்துக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்ரத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம், பந்தயத்தின் போது சேவல் கால்களில் கட்டப்படும் கத்திகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சேவல்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் கூறி வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தது. சேவல் பந்தயத்தின் மீதான தடையை அகற்றவில்லை.
தற்போது நீதிமன்றம் தடை உத்தரவை மீறி ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நாளை முதல் தொடங்குகிறது.