Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ஆந்திர பெண்; திருப்பி அனுப்பிய காவலர்கள்

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ஆந்திர பெண்; திருப்பி அனுப்பிய காவலர்கள்
, ஞாயிறு, 19 நவம்பர் 2017 (20:07 IST)
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற 31வயது பெண்ணை பாதுகாலவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.


 

 
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது.
 
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளார். பம்பை நதி அருகே பெண்கள் நுழையாமல் தடுப்பதற்கு காவலர்கள் பலத்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த பெண் அதை மீறி வந்துள்ளார். பதினெட்டாம்படி அருகே கோயில் பாதுகாவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தினர். அவரது அடையாள அட்டையை சரிபார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 31வயது என்பது அதன்மூலம் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து காவலர்கள் அந்த பெண்ணை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் அங்கிருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் எப்படி பம்பை நதி அருகே சோதனையில் ஈடுபடும் காவலர்களை மீறி கோயில் வரை வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேகிங் செய்த மருத்துவ மாணவிகள்; ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த கல்லூரி