வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்.. விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (12:49 IST)
வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் சேவையை விரைவில் தொடங்க இருப்பதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்த சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்றும் அதன் பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றது முதல், ஆந்திராவில் பல்வேறு புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வாட்ஸப் செயலி மூலம் இனி பிறப்பு இறப்பு சான்றிதழை மிகவும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சேவையை வாட்ஸ்அப் செயலி மூலம் வழங்குவதால் மக்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்றும், இந்த நோக்கத்தை கொண்டு தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார் என்றும் தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

இந்த சேவையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து, மருத்துவம், நகராட்சி நிர்வாக துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments