நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திராவில் மக்கள் கூட்டம் கூட்டமாக உகாதி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பகுதி நேர, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவற்றை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆந்திராவில் உகாதி திருநாள் கொண்டாடப்பட்டது.
ஆந்திராவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் குர்னூல் பகுதியில் உகாதி கொண்டாடிய ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்க் உள்ளிட்டவை அணியாமல் மாட்டு சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கொரோனா அசுரகதியில் பரவி வரும் நிலையில் இப்படியான கொண்டாட்டங்கள் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.