அம்பானியின் குடும்ப திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அங்கீகாரம் வழங்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பிள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் குஜராத்தில் களைகட்டியுள்ளது. ஜாம்நகரில் இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். .
இந்நிலையில் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் அங்கு வர இருப்பதால், ஒரு திருமண நிகழ்விற்காகவே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு திடீர் சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் '10 நாள் திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அங்கீகாரம் வழங்காமல் மத்திய அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?' என்று தனது எக்ஸ் வலைத்தளத்தில் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.