மத்திய பிரதேசத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து லஞ்சமாக பெற்ற பணத்தை வருவாய்த்துறை அதிகாரி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும், பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிக் கொள்வதும் அவ்வபோது நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றிய பட்வாரி கஜேந்திரன் என்பவர் உயர் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தான் வாங்கிய ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். அது குடலில் சிக்கியதால் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை வாந்தி எடுக்க செய்து பணத்தை வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்த்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.