Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஒட்டக பாலில் டீ குடிக்கலாம் – அமுல் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:41 IST)
இந்தியா முழுவதும் ஒட்டகப் பாலை விநியோகிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமுல் நிறுவனம்.

இத்தனை நாளாக ஆட்டுப்பால், மாட்டுப்பால், கழுதைப்பால் உள்பட பலவற்றை தமிழ்நாட்டில் உபயோகித்து வந்துள்ளார்கள். ஆனால் இந்த ஒட்டகப் பால் என்பதை வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் கேள்விப்பட்டுள்ளதை தாண்டி சுவைக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. துபாய் போய்வரும் ஊர்க்காரர்கள் ஒட்டகப் பாலின் மகிமைகளை பற்றி ஊருக்குள் பேசி திரிவதையும் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இந்நிலையில் பால் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமான அமுல் ஒட்டகப் பால் விநியோகத்தை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் ஆர்.எஸ்.சோதி ”முதல் முயற்சியாக 200 மி.லி ஒட்டகப் பால் பாட்டில்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் விலையை 25 ரூபாயாக நிர்ணயம் செய்து உள்ளோம். இதற்கான பணிகள் காந்திநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில் ஒட்டகப் பால் விற்பனைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

உக்ரைன் உடனான போரை நிறுத்திக் கொள்ள தயார்! சமரசத்துக்கு வரும் புதின்? ட்ரம்ப்தான் காரணமா?

நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments