Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வாரத்தில் அரசியலை விட்டு விலகிய அம்பத்தி ராயுடு.. பவன்கல்யாண் கட்சியில் சேருகிறாரா?

Advertiesment
Ambathi Rayudu

Siva

, வியாழன், 11 ஜனவரி 2024 (07:09 IST)
ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு இணைந்த நிலையில் திடீரென அவர் அந்த கட்சியில் இருந்து விலகியது மட்டுமின்றி அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். 
 
ஆனால் தற்போது அவர் மீண்டும் வேறொரு கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஜெகன்மோகன் ரெட்டியின் ஒ ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டு அதன் பிறகு திடீரென ஒரே வாரத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும் அவர் அரசியலில் இனி மேல் ஈடுபட போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உடன் அம்பத்தி ராயுடு சந்திப்பு நடந்து உள்ளது. இதனையடுத்து அவர் ஜனசேனா கட்சியில் இன்று இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
அம்பத்தி ராயுடு திடீர் திடீரென தனது முடிவை மாட்டிக் கொண்டே செல்வதை அடுத்து அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக ஆந்திர மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரலையில் நெறியாளர் மீது துப்பாக்கி வைத்த கும்பல் - டி.வி. நிலையத்திற்குள் என்ன நடந்தது?