Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவால் கைப்பற்ற முடியாது: அமித் ஷா

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:38 IST)
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஒரு இன்ச் இந்திய நிலத்தை கூட சீனாவால் கைப்பற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே சமீபத்தில் மோதல் நடந்தது என்றும் இரு தரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் சீன தரப்பில் காயம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை என்றும் செய்தி வெளியானது.
 
இந்த நிலையில் சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.  மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை சீனா உள்பட எந்த நாளும் இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தை கூட கைப்பற்ற முடியாது என்றும் சீன படைகளுக்கு எதிராக இந்திய வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டி அதற்கு நான் தலை வணங்குகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments