பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்த ராஜ்நாத் சிங், அமித்ஷா: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:59 IST)
பிரதமர் மோடியை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று அவசரமாக சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களும் சந்தித்து உள்ளதாக தெரிகின்றது 
 
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ட்ரோன் மூலம் குண்டுவெடிப்பு நடைபெற்று வருவது மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவது குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது
 
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், ஜம்மு-காஷ்மீர் அரசியல் குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
 
நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று சீனியர் அமைச்சர்கள் திடீரென பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது டெல்லி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments