Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் - அமித்ஷா பேட்டி

கர்நாடகாவில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் - அமித்ஷா பேட்டி
, திங்கள், 21 மே 2018 (16:28 IST)
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கே உரிமை உள்ளது எனவும், காங்கிரஸ்-மஜத கூட்டணியை மக்கள் ஆதரிக்கவில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா கூறியுள்ளார்.

 
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்துவிட்ட நிலையில்  கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதனையடுத்து வரும் புதன்கிழமை கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமித்ஷா “கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி செயல்பட்டது. தவறான வாக்குறுதிகளை அளித்தது. ஆனாலும், மக்கள் தோல்வியை கொடுத்தனர். ஆனாலும், காங்கிரஸ் கட்சி தோல்வியை கொண்டாடி வருகிறது. சாதி, மத அடிப்படையில் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. பாஜக மீது நம்பிக்கை வைத்துதான், கர்நாடக மக்கள் அதிக இடங்களை அளித்தனர். 
 
எனவே, ஆட்சி அமைக்க பாஜகவிற்கே முதல் உரிமை உள்ளது. காங்கிரஸ் கட்சிகள் ஏராளமான ஊழல் நடந்தது. அதனால்தான் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மஜத-காங்கிரஸ் கூட்டணியை கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்திய கல்லூரி! வேறு இடமே கிடைக்கலையா?