மோடி தலைமலையிலான அமைச்சவரையில் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு...
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமனம்
மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமனம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்
மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமனம்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
வெளியுறவுத்துறை இணையமைச்சராக முரளிதரன் நியமனம்
சட்டத்துறை, தகவல், மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமனம்
ரசாயனத்துறை அமைச்சராக சதனந்த கவுடா நியமனம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஜவுளிதுறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரி நியமனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்
விளையாட்டுத் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜூ நியமனம்