சறுக்கி விழுந்த அமித்ஷா: தேர்தல் பிரச்சாரத்தின்போது பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (17:32 IST)
ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 28ஆம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தை முடித்த பின்னர் அவர் தனது பிரச்சார தேரில் இருந்து இறங்கியபோது திடீரென எதிர்பாராமல் சறுக்கி கீழே விழுந்தார். உடனடியாக பாஜக தொண்டர்களும், பாதுகாப்பு காவலர்களும் அமித்ஷாவை கைத்தாங்கலாக தூக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமித்ஷாவுக்கு எந்த காயமும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மபி மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: வட்டி விகித குறைப்பு நம்பிக்கையால் ஏற்றம்!

சைக்கிளோத்தான் சென்னை 2025': கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடிக்கு ஜெர்சி அனுப்பிய மெஸ்ஸி.. என்ன காரணம்?

திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட உருவாகவில்லை.. அதிமுக குற்றச்சாட்டு..

அடுத்த கட்டுரையில்
Show comments