ராகுல் காந்தி அடிக்கடி ரகசிய வெளிநாட்டு பயணம் ஏன்? இப்போது அவர் எங்கிருக்கிறார்? பாஜக

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (11:05 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரகசியமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக பாஜக தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அவர் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
தனது X பக்கத்தில் மால்வியா ‘ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்ததாகவும், இப்போது மீண்டும் அடையாளம் தெரியாத இடத்திற்கு வெளிநாடு சென்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தி  இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
 
"ஏன் அவர்  காணாமல் போகிறார்? இவஎ  அடிக்கடி வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்துவது எது?  என்றும் மால்வியா தனது பதிவில் மேலும் தெரிவித்தார்.
 
பாஜக தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உடனடியாக மறுத்தது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது X பக்கத்தில், ராகுல் காந்தி தனது மருமகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ளதாகவும், விரைவில் திரும்பி வருவார் என்றும் பதிவிட்டார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments