Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கோடா கடை வைக்க நிதி தாருங்கள்: மத்திய அமைச்சருக்கு இளைஞர் எழுதிய நக்கல் கடிதம்

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (11:22 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பக்கோடா கடை வைத்து தொழில் செய்வது குறித்து பேசிய கருத்துக்கு ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கிண்டலடித்தனர். மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட  பல காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பக்கோடா செய்து பிரதமருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்ற இளைஞர் 'தான் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதாகவும், பிரதமரின் அறிவுரையின்படி பக்கோடா கடை வைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் பக்கோடா வைக்க வங்கியில் கடன் தர மறுப்பதாகவும், இதற்கு நீங்கள் தான் நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   

இந்த கடிதத்தின் நகல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருவதால் பாஜகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments