காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக காஷ்மீருடனான அரசுரீதியான உறவுகளை இந்தியா துண்டித்துள்ளது. இந்த சம்பவத்தில் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் தாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் வாதம் செய்து வருகிறது.
இந்நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு துறை இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்த தாக்குதல் தொடர்பாக சர்வதேச நாடுகள் அமர்வில் விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் குவாஜா ஆசிப் “இந்த நெருக்கடியான சூழலில் சீனா, ரஷ்யா நாடுகள் ஒரு நேர்மையான பங்களிப்பை தர முடியும். அவர்கள் ஒரு விசாரணை குழுவை அமைத்து இது குறித்து விசாரிக்க வேண்டும். இந்தியா அல்லது பிரதமர் மோடி பொய் சொல்கிறார்களா? உண்மை சொல்கிறார்களா? என சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்” என பேசியுள்ளார்.
சீனாவும், ரஷ்யாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் நாடுகள் என்பதாலேயே அவர்கள் அந்த நாடுகளை சிபாரிசு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K