Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திரா - பீகார் தவிர பிற மாநிலங்களுக்கு அல்வா.! நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்.!!

Prakash Raj

Senthil Velan

, செவ்வாய், 23 ஜூலை 2024 (17:31 IST)
ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா தான் என்று மத்திய பட்ஜெட் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
 
2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 
இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆந்திரா - பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது என்றும் மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள் என்றும் கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாற்றம் அளிக்கும் மத்திய பட்ஜெட்.! தமிழ்நாடு மீது பாஜகவுக்கு காழ்ப்புணர்ச்சி.! இபிஎஸ் விமர்சனம்.!!