செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கிட்டு பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாட்னா மற்றும் பெங்களூரை அடுத்து நேற்று I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் கூடியது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என கூறப்படுவதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தொகுதி பங்கிட்டை முடிக்க வேண்டும் என்றும் விரைவில் பொதுவான செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணியின் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் இது குறித்து அறிவுறுத்தி உள்ளதாகவும் அதை மற்ற கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.