Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸுடன் கூட்டணியா? சோனியா காந்தியை சந்தித்த முதல்வரின் சகோதரி

YSR sharmila
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:56 IST)
வரும் 2024 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜெயிக்க வேண்டி பல கட்சிகள் திட்டமிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் பாஜக அரசை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அந்தக் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், திமுக, விசிக உள்ளிட்ட 16கட்சிகள் இணைந்துள்ளது. ஏற்கனவே 2 ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று 3 அது கூட்டம் மும்பையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். அதேபோல்  பல கட்சி தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த  நிலையில்,தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சோனியா காந்தியுடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகி ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: அதிரடி உத்தரவு..!