Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கூட்டணி நிச்சயம்.! மக்களின் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம்" - ராகுல் காந்தி..!!

Advertiesment
Rahul Gandhi

Senthil Velan

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (15:36 IST)
ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், வேதனை மற்றும் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  ஜம்மு காஷ்மீர் மக்களை நான் நேசிக்கிறேன் என்றும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறேன் என்றும் தெரிவித்தார்.
 
ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், வேதனை மற்றும் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம் என குறிப்பிட்ட ராகுல், ஜம்மு காஷ்மீரில் யாரேனும் அச்சமின்றி உழைத்திருந்தால் அது காங்கிரஸ்காரர்தான் என்று கூறினார். இதற்குப் பிறகும் நீங்கள் காங்கிரஸின் சித்தாந்தத்துக்காக போராடுகிறீர்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காக உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளீர்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி இருக்கும் என்றும் அது காங்கிரஸ் தொண்டர்களின் மரியாதையைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார். மக்களவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது என்றும் அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், இந்தியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

 
வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி என்று தெரிவித்தார். மேலும், ஒற்றுமையின் மூலம் நாம் வெறுப்பை அன்பால் தோற்கடிப்போம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நடிகைகள் - ஹேமா அறிக்கை கூறுவது என்ன?