மருத்துவக் கட்டணம் கட்டாததால் தையல் போடாமல் அனுப்பப்பட்ட சிறுமி மரணம்! உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (08:04 IST)
உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சைக்கான முழுத் தொகையும் கட்டாததால் 3 வயது சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமி ஒருவரை வயிறு சம்மந்தமான சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் குடும்பத்தினர். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அதற்கு 5 லட்சம் ரூபாய் கட்டவேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் அவரது பெற்றோரால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே கட்ட முடிந்துள்ளது. இதனால் சிறுமிக்கு அறுவை சிகிச்சை முடிந்து தையல் சரியாக போடாமல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குழந்தை இறந்துள்ளது. இது சம்மந்தமாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments