Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் : இந்தியாவில் விரைவில் அமல்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (14:15 IST)
மொபைல்போன் உள்பட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜர் பயன்படுத்தும் திட்டம் விரைவில் இந்தியாவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தற்போது ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐ போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தனித்தனி சார்ஜர் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மின்னணு கழிவுகள் அதிகமாகி பெரும் பிரச்சனை ஏற்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் இனி ’சி’ டைப் சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இதன் காரணமாக மின்னணு கழிவுகள் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் குறைந்த விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் ’சி’ டைப் சார்ஜரை வழங்குவதால் அதிக செலவாகும் என்பதால் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments