Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டுக்கு பேராபத்து; உஷார் நிலையில் அனைத்து மாநிலங்கள்: மத்திய அரசு உத்தரவு!

நாட்டுக்கு பேராபத்து; உஷார் நிலையில் அனைத்து மாநிலங்கள்: மத்திய அரசு உத்தரவு!

நாட்டுக்கு பேராபத்து; உஷார் நிலையில் அனைத்து மாநிலங்கள்: மத்திய அரசு உத்தரவு!
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:55 IST)
காஷ்மீர் உரி பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து, நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது.


 
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து மத்திய அரசு அமைச்சரவை கூட்டம், அனைத்து கட்சிகள் கூட்டம் உள்ளிட்டவை நடத்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்தது.
 
இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியது. போர் நடக்கும் சூழல் நிலவியது. இதன் காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநில அரசு எல்லை பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டது.
 
இந்நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கையின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 
எல்லை பதற்றத்தால் அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத்துறை இந்த உத்தரவை கொடுத்துள்ளது. பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவு.
 
சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிப்பு. எல்லையில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்திருந்த நிலையில் இந்த பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒயின் குடிங்க... உச்ச நீதிமன்றமே சொல்லியாச்சு...