Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானங்கள் அனைத்திற்கும் தடை: வெளிநாட்டில் சிக்கியவர்களின் கதி என்ன?

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (20:20 IST)
உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்து வரும் நிலையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரசால் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால் பரவுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மார்ச் 22 முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டு இந்தியா திரும்பாமல் இருக்கும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மார்ச் 22ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது மார்ச் 29ஆம் தேதிக்கு பின்னர் அவர்கள் இந்தியாவிற்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டும் கொரோனா அதிகம் தாக்குவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments