அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

Prasanth K
வியாழன், 5 ஜூன் 2025 (09:57 IST)

இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் பணம் எடுக்கும் ஏடிஎம் எந்திரங்கள் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. பல நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை ஏடிஎம்கள் உள்ளதால் மக்கள் பணம் எடுக்க வங்கிக்கு செல்வதை விட ஏடிஎம் சென்றே பணத்தை எடுத்து வருகின்றனர்.தற்போது ரூ.2000 தடை செய்யப்பட்டு விட்ட நிலையில், ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகியவை ஏடிஎம்மில் பயன்படுத்தப்படும் பணமாக இருக்கிறது. இதற்காக ஏடிம் எந்திரங்களில் 4 கேசட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 இந்நிலையில் பல்வேறு ஏடிஎம்களில் ரூ.500 தாள்கள் மட்டுமே இருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ரூ.500க்கு குறைவாக பணம் எடுக்க நினைப்பவர்கள் பணம் எடுக்க முடியாத சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனால் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

அதில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் ஒரு கேசட்டில் குறைந்தது 75 சதவீதம் அளவிற்கு ரூ.100 அல்லது ரூ.200 தாள்கள் நிரப்பப்பட வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதை 90 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதாவது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பப்படும் ரூபாய் நோட்டுகளில் நான்கில் ஒரு பங்கு அளவிற்கு ரூ.100 அல்லது ரூ.200 தாள்கள் நிரப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments