Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் வெற்றியைத் தடுப்பேன்: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ ஆவேசம்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (07:15 IST)
இந்தியா முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாலும் அவை ஒற்றுமையாக இல்லாமல், தனித்தனியே பாஜகவை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் பாஜகவை எளிதில் வீழ்த்தலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது
 
ஆனால் உபி, டெல்லி உள்பட பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பாஜகவை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கைகோர்த்து பாஜகவை வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு கட்சிகளின் ஈகோ காரணமாக இந்த கூட்டணி அமையவில்லை
 
இந்த நிலையில் கூட்டணி இல்லை என்றாலும் டெல்லியில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் அல்கா லாம்பா என்பவர் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் நேற்று பிரசாரம் செய்த அல்கா லாம்பா பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் என்றும், ஜம்மா மசூதி அருகே பிரச்சாரம் செய்த கெஜ்ரிவால், பாஜகவை தோற்கடிக்க காங்கிரசின் உதவி தேவை என்று கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே வரும் தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி ஆதரவு தர முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments