வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்சயகுமார் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:20 IST)
பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீட்டில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தர்.
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த 100 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டது என்பதும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொரோனா தொற்று உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்வு..!

பிரசாந்த் கிஷோர் நிலமைதான் விஜய்க்கும்!.. மறைமுகமாக சொன்ன தமிழிசை!...

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்.. சென்னையில் 3 நாட்களுக்கு பின் வெயில்..!

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தை பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments