உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக மற்றும் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகியவை தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சமாஜ்வாடி ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது
ஏற்கனவே அவர் எம்பியாக இருக்கும் நிலையில் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சமாஜ்வாதி ஜனதா கட்சி வெற்றி பெற்றால் அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது