Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவுக்கு ஆப்பு வைத்த ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (08:17 IST)
வேறு நெட்வொர்க்குகளுக்கு பேசினால் இனி கட்டணம் என்றும், நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு ஆப்பு வைக்கும் வகையில் வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
டிசம்பர் 3ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு துறையின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுவதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் அறிவித்துள்ளன.
 
முன்னதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின என்பதும் இதனால் ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் ஏர்டெல்லின் இந்த அறிவிப்பை சமாளிக்க ‘ஆல் இன் ஒன்’ பிளான் மூலம் பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக ஜியோ அறிவித்துள்ளது. மொத்தத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியால் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments