Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தணிந்ததா தாக்குதல் பதற்றம்? மீண்டும் துவங்கிய விமான சேவை

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (16:09 IST)
நேற்று இந்தியா எல்லை தாண்டி பாலகோட் எனும் பகுதியில் நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
 
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இருநாடுகளும் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திவருவதால் இரு நாடுகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 
 
இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் இந்தியா தனது எல்லையோரப்பகுதிகளில் உள்ள விமான நிலையங்களை மூட முடிவு செய்தது. அதுபோல இந்தியா பாகிஸ்தான் இடையிலான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது 8 விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் வான்வழித் தாக்குதல் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments