Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: விழுந்து நொறுங்கியதா?

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (19:21 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற சரக்கு விமானம் இன்று அசாமிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்றபோது திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் இருந்த நிலையில் அவர்களது கதி என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது. 
 
அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மேற்கு சியாங்க் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், இதுகுறித்து செய்தி தெரிய வந்ததும் இந்திய விமானப்படையினர்களும் மீட்புப்படையினர்களும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மீட்புப்பணிக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்த 13 பேர்களின் கதி என்ன என்பது தெரிய வரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments