Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் காற்றின் மாசு பலமடங்கு குறைவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் காற்றின் மாசு பலமடங்கு குறைவு
, புதன், 7 நவம்பர் 2018 (20:33 IST)
தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உள்பட இந்தியாவின் அனைத்து காவல்துறைகளும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த உத்தரவின்படி பெரும்பாலான மக்கள் செயல்படவில்லை என்றாலும் பட்டாசு வெடிக்கும் நேரம் ஓரளவுக்கு குறைந்தே இந்த ஆண்டு காணப்பட்டது. ஒருசிலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அனைவரும் பயந்தபடியே பட்டாசு வெடித்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நேற்றைய தீபாவளி தினத்தில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்லியிலும் காற்று மாசு குறைந்துள்ளதாகவும், சென்னையில் கடந்த ஆண்டு 255 என்ற அளவில் மாசு பதிவான நிலையில் நேற்று வெறும் 33 அளவே பதிவாகியுள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் காற்றின் மாசு பலமடங்கு குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைப்பா?