Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா: வெளிநாட்டு இந்தியர்களை அழைத்து வருவதில் சிக்கலா?

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (19:09 IST)
கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் தாய்நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா ஊழியர்கள் 7 பேருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கும் அதன் பொறியியல் பிரிவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களாகத்தான் வெளிநாட்டு இந்தியர்களை மீட்கும் பணியை ஏர் இந்தியா துவங்கியுள்ள நிலையில் திடீரென 5 பைலட்டுக்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் கடந்த ஒரு மாதமாக இவர்கள் எந்த விமானத்தையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென 5 பைலட்டுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்த ஐந்து விமானிகள் மற்றும் இரண்டு பொறியியல் பணியாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments