ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாக மருத்துவ குழு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருண் சிங்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தற்போது வெலிங்டனில் ராணுவ மருத்துவமனையிலிருந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சையில் அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவருக்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது விபத்து எதனால் நடந்தது போன்ற விவரங்கள் தெரிய வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது.