Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின், லதா மங்கேஷ்கரை கேவலாமாக அவமதித்து வீடியோ: மும்பையில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 30 மே 2016 (16:39 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினையும், பிரபல பாடகியுமான லதா மங்கேஷ்கரையும் அவமதிக்கும் விதமாக அவர்களை கலாய்த்து மிகவும் கீழ் தரமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


 
 
தன்மே பட் என்பவர் சச்சின் மற்றும் லதா மங்கேஷ்கரின் உருவத்தில் வந்து அவர்களை கலாய்க்கிறார். அதில் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவரா? கோலி சிறந்தவரா என்ற கேள்விக்கு சச்சின், லதா மங்கேஷ்கர் உருவத்தில் வந்து பேசும் அவர் மிகவும் கீழ் தரமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்.
 
அரசியல், சினிமா செய்திகளை காமெடியாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடும் ஏஐபி குழுவைச் சேர்ந்த தன்மே பட் யூ டியூபில் “Sachin vs Lata Civil War” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
 

 
இந்த வீடியோவை வெளியிட்ட ஏஐபி மற்றும் தன்மே பட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகராஷ்டிர முதலமைச்சருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா அமைப்பினர், சச்சின் மற்றும் லதாமங்கேஷ்கர் வீடியோவிற்கு எதிராக மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
மேலும் தன்மே பட்டின் வீடியோவை முடக்க, ஃபேஸ்புக், கூகுள், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களை தொடர்பு கொண்டுள்ளதாக மும்பை சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments