மத்திய அரசின் திட்டங்களுக்கு ராகுல்காந்தி வரவேற்பு…பாஜக ஹேப்பி !

வியாழன், 26 மார்ச் 2020 (19:47 IST)
மத்திய அரசின் திட்டங்களுக்கு ராகுல்காந்தி வரவேற்பு…பாஜக ஹேப்பி !

இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சச்ரவையி உள்ள அமைச்சர்கள் தொடர்ச்சியாக பல பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இதில் நாட்டு மக்களின் பசி, பட்டிணி, வேலையின்மையைப் போக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நாடு முழுவதும் ஊரடங்கு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரின் நிதியுதவித் திட்டங்கள் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும். இதன் மூலம் நாட்டில் உள்ள விவசாயிகள், மூத்தகுடிமக்கள், தினக்கூலித் தொழிலாளிகளுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது எனதெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் பாராட்டு பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் Free Netflix-னு மெசேஜ் வந்துச்சா..? அப்போ இது உங்களுக்கு தான்!!