Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 13 ஜூன் 2025 (17:21 IST)
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, LIC பாலிசி இருந்தால், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, மரணச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், மத்திய அல்லது மாநில அரசு அளிக்கும் ஆவணங்கள் இருந்தால்கூட, உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என எல்ஐசி தெரிவித்துள்ளது.
 
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கான எல்ஐசி காப்பீட்டுத் தொகையை மிகவும் எளிதாக முடித்துக்கொடுக்க, எல்ஐசி தானாகவே முன்வந்துள்ளது. 
இறந்தவர்கள் காப்பீடு செய்திருந்தால், எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றும், மரணச் சான்றிதழ் அவசியம் இல்லை என்றும் எல்ஐசி கூறியுள்ளது. 
 
மத்திய அல்லது மாநில அரசு அல்லது விமான நிறுவனம் அளிக்கும் ஆவணங்கள் இருந்தால்கூட, உடனடியாக அதையே மரணச் சான்றிதழாக ஏற்றுக்கொண்டு, காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments