ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

Mahendran
வெள்ளி, 13 ஜூன் 2025 (15:00 IST)
ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம் அடைந்த நிலையில், நேற்று விமான விபத்தில் அப்பாவும் மரணம் அடைந்ததால் இரண்டு இந்தியா வம்சாவளி பெண் குழந்தைகள் லண்டனில் தவித்து வருவதாக வெளியாகிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லண்டனில் அர்ஜுன் பட்டோலியா என்பவர் தனது மனைவி பாரதி பெண் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்த நிலையில் பாரதிபென் ஏழு நாட்களுக்கு முன்புதான் உயிரிழந்தார். தனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு சென்று அங்குள்ள நர்மதை ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கடைசி ஆசையாக கேட்டிருந்தார். 
 
 லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, தனது மனைவி பாரதிபென்னின் இறுதி ஆசையை நிறைவேற்ற, அவரது அஸ்தியை இந்தியாவில் உள்ள நர்மதை ஆற்றில் கரைத்துவிட்டு, மீண்டும் லண்டன் திரும்பும்போது ஏற்பட்ட விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
அர்ஜுன் பட்டோலியாவுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு தாயை இழந்த அந்த குழந்தைகள், இப்போது தந்தையையும் விமான விபத்தில் இழந்தது, கேட்பவர்கள் மனதை உருக்குவதாக உள்ளது. பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் அந்த குழந்தைகளின் நிலை, அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments