விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (09:37 IST)
அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்து, இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது. லண்டன் நோக்கி சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில், விமானப் பயணிகள், ஊழியர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் என 274 பேர் உயிரிழந்தனர் 
 
விபத்தில் பலியானவர்களில் 10 மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 24 மருத்துவ மாணவர்கள் ஆகியோர் அடங்குவர். விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
 
பலியானவர்களில் மேகானினகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்த 10 மருத்துவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களும் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 24 MBBS மாணவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மொத்தத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர்கள் மட்டுமின்றி தரையில் இருந்தவர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments