வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாடம் பொதுக்கூட்டங்களில் பங்குபெற்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் பறக்கவிட்ட மோடி அம்பானிக்கும், நீரவ் மோடிக்கும் ஆயிரம் ஆயிரம் கோடியாக பணத்தை கொடுத்துள்ளார். விவசாயிகளை காப்பாற்றுவேன் என கூறி அவர்களை தவிக்கவிட்டுள்ளார்.
வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.