மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து தானே மாவட்டத்தை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப் படுவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது
இன்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதாக தொண்டர்களின் கொந்தளிப்பை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.