Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்: வெற்றி பெறுமா?

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (08:08 IST)
மக்களவையில் சமீபத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் அதே நேரத்தில் சிரோமணி அகாலிதளம் உள்பட ஒருசில ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மசோதாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ]
 
இந்த நிலையில் மக்களவையில் வெற்றிகரமாக 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வரும் 23ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மாநிலங்களவையில் மொத்தம் 243 எம்பிக்கள் உள்ள நிலையில் மசோதாக்கள் நிறைவேற 122 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 105 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலும் 100எம்பிக்கள் மட்டுமே இருப்பதால் மசோதாவை தோல்வியடைய செய்வதும் முடியாத ஒன்றாக உள்ளது
 
இந்த நிலையில் 122 என்ற ஆதரவு எம்பிக்களை பாஜக எப்படி திரட்டி, மசோதாவை வெற்றிகரமாக முடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments