இந்திய பங்கு சந்தை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் இருந்தனர். ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில் சற்று ஆறுதலாக இன்று சென்சஸ் 429 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனை அடுத்து மத்திய அரசு என்று உறுதிமொழி அளித்ததை அடுத்து பங்கு சந்தை இன்று காலை முதலே உயர்ந்து வந்தது
இன்று 41,357 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் வர்த்தக நேர இறுதியில் 429 புள்ளிகள் உயர்வுடன் 41,323 புள்ளிகளில் நிலைகொண்டது என்பதும் அதே போன்று நிஃப்டி 133 புள்ளிகள் உயர்வுடன் 12,126 புள்ளிகளில் நிறைவுற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது