டெல்லி துணை முதலமைச்சரை அடுத்து தெலுங்கானா முதல்வர் மகள் வீட்டிலும் சிபிஐ சோதனை?
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது 
 
									
										
			        							
								
																	
	 
	இதனையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	 இதனையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் மகள் கவிதா வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். இதில் தெலுங்கானா மாநில தலைவர் சஞ்சய் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது