Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி திருவிழா நடத்திய பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (17:59 IST)
மத்திய அரசின் ஆட்சி 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததை மாட்டிறைச்சி திருவிழா வைத்து கொண்டாடிய மேகாலயா பாஜக தலைவர், பாஜகவை விட்டு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் அதிக எதிர்ப்பு எழுந்தது. கேரளா முதல்வர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் மாட்டிறைச்சி தடையை அமல்படுத்த முடியாது என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேகாலயா மாநில பாஜக மூத்த தலைவர் பெர்னார்ட் மார்க் கடந்த சில நாட்களுக்கு முன் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார். அவரைத்தொடர்ந்து தற்போது மேகாலயாவின் மாநில பாஜக தலைவர் பச்சு மாரக்கும் கட்சியை விட்டு விலகியுள்ளார். 
 
இவர்தான் அண்மையில் மத்திய அரசின் ஆட்சி 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததை மாட்டிறைச்சி திருவிழா வைத்து கொண்டாடியவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments