Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் உணவு சப்ளை: அமேசானை அடுத்து களமிறங்கும் பிளிப்கார்ட்!

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (09:44 IST)
சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிடுவதை பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஜோமைட்டோ, ஸ்விக்கி உள்பட ஒரு சில நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் உணவு சப்ளை சேவை செய்து வருகின்ற நிலையில் இந்த சேவையில் அமேசான் விரைவில் களமிறங்க வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் வரும் தீபாவளி முதல் பெங்களூரில் தொடங்க இருப்பதாகவும் இதனை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு சப்ளை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆன்லைனில் உணவு சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக பிளிப்கார்ட் நிறுவனம் உணவு சப்ளை செய்யும் லைசென்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனமும் ஆன்லைன் உணவு சப்ளை சேவையில் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
நிறுவனங்களுக்கு இடையே உணவு சப்ளை செய்வதில் போட்டி அதிகரித்தால் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்தான். பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்த துறையில் காலடி எடுத்து வைத்தால் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் துரிதமாகவும், குறைந்த விலையிலும், சலுகைகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments