பேஸ்புக்கால் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மகனுடன் இணைந்த தாய்! ஹைதராபாத் சுவாரஸ்யம்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:39 IST)
கடந்த 2011ம் ஆண்டு மாயமான மகனை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாய் ஒருவர்.

ஹைதராபாத் அருகேயுள்ள குஷய்குடா பகுதியைச் சேர்ந்தவர் சூஸானா. இவர் தனது மகன் தினேஷ் ஜெனாவைக் காணவில்லை என கடந்த 2011ம் ஆண்டு குஷய்குடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீசார் விசாரித்ததில், அவரது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புகார் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.
 
இந்தநிலையில் பேஸ்புக்கில் தனது மகன் பெயரில் ஒரு அக்கவுண்ட் இருப்பதை சூஸானா சமீபத்தில் கண்டுபிடித்தார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குஷய்குடா போலீஸ் ஸ்டேனில் புதிதாக ஒரு புகாரைப் பதிவு செய்தார். இதனால் சுறுசுறுப்பான போலீசார், சைபர் க்ரைம் பிரிவு உதவியுடன் அந்த பேஸ்புக் அக்கவுண்ட் செயல்படும் ஐபி அட்ரஸை ட்ரேஸ் செய்தனர். அந்த அக்கவுண்ட் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இருந்து செயல்படுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பஞ்சாப் விரைந்த தெலங்கானா போலீசார், சூஸானாவின் மகனான தினேஷ் ஜெனாவைக் கண்டுபிடித்து அவருடன் சேர்த்து வைத்தனர். கடந்த 8 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாய், தனது மகனுடன் பேஸ்புக்கால் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments