Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த நபர்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த நபர்
, திங்கள், 26 ஜூன் 2023 (16:28 IST)
கர்நாடக மாநிலத்தில் தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பரின் கழுத்தை  அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(36). இவர்ச சிந்தாமணி பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாரேஷ், விஜய் இருவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகள் கொண்டு சென்று வியாபரம் செய்து வந்தனர். இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு மாரேஷ்(34) அடிக்கடி சென்று வந்த நிலையில், மாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக விஜய்க்கு சந்தேகம் வந்தது.இதுபற்றி மாரேஷிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரேஷின் கழுத்தை அறுத்து, ரத்தம் கொட்டியபோது, அதைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ கடந்த 19 ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விஜய்யை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா முதலிடம்