Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி - அறங்காவலர் தலைவர்

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல்  வழியாக பக்தர்களுக்கு அனுமதி -  அறங்காவலர் தலைவர்
, வியாழன், 1 டிசம்பர் 2022 (17:23 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பிற்காக வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல், 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல்  வழியாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களில் இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும்.

இங்கு வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பையொட்டி மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதில்.வைகுண்ட ஏகாதச் சொர்க்க வாசல் திறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலி வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக 10 நாட்களும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


விஐபி தரிசனம் ஜனவரி 2 ஆம் தேதி என்றும்,  ஜனவரி 2 முதல், 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ளள கவுண்டர்ககளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் எத்தனை கோடி? நிதியமைச்சர் நிர்மலா தகவல்