Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது பணியைத் தொடங்கிய ஆதித்யா எல் 1- இஸ்ரோ

Aditya L1
, திங்கள், 4 டிசம்பர் 2023 (17:10 IST)
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.
 
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.

ஸ்டெப்ஸ் கருவி கடந்த செப்., 10 ஆம் தேதி இயங்கத் தொடங்கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது எனவும், இக்கருவி, 360 டிகிரி பார்வை கொண்டதாகவும், சூரிய காற்றின் அயனிகள், புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்